யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம்  தோல்வி : பதவியை இழக்கின்றார் முதல்வர் ஆர்னோல்ட்

Published By: Digital Desk 3

16 Dec, 2020 | 01:39 PM
image

(எம்.நியூட்டன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட  யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர்  இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும்  இன்று (16.12.2020)  யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அந்த வகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13  உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தது.

இரண்டு தடவைகள் தேற்கடிக்கப்பட்டமையால் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார். அடுத்து இரண்டு வாரத்திற்குள் முதல்வர் தெரிவு இடம்பெறவேண்டும் எனபது உள்ளுராட்சி மன்ற சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02