இந்திய அரசிடம் உருக்கமான கோரிக்கை விடுத்து, முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது..!

Published By: J.G.Stephan

16 Dec, 2020 | 12:40 PM
image

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளான இந்திய உறவுகளுக்கும் எமக்கும் பகையுணர்வை ஏற்படுத்தாது எல்லை தாண்டிய மீன்பிடியை தடுத்து நிறுத்தி, எமது வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மீன்பிடித்துறை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மீனவர்கள்,  30 வருட கால யுத்தத்திலும் சுனாமி பேரலையிலும் அனைத்தையும் இழந்து மெல்ல மெல்ல மீளெழுந்துவரும் எமது வாழ்வாதாரத்தை சுரண்டுவதை  நிறுத்துமாறும், போராட்ட  காலங்களில்  எமக்காக  தீக்குளித்த உறவுகள் அவ்வாறான எமது உறவுகளை சீர்குலைக்காது, இரு நாட்டு அரசுகளும் பேசி எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்தி உதவ வேண்டுமெனவும் கோரியுள்ளனர். 

அதேவேளை இந்தியாவில் உள்ள மீன்பிடி அமைப்புக்கள் அவர்களுடைய இழுவைப்படகு உரிமையாளர்களிடம்  கூறி  எமது எல்லைக்குள் வந்து எமது வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53