தனுஷ்கவின் அதிரடி, ஹசரங்கவின் சுழல் ; கிண்ணத்தை முத்தமிடப் போவது யார்? - இறுதிப் போட்டி இன்று

Published By: Vishnu

16 Dec, 2020 | 11:43 AM
image

மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.

புதிய சாம்பியன்ஷிப் கிண்ணத்தை முத்தமிட வேண்டும் என்ற நோக்குடன் இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளது.

ஸ்டாலியன்ஸ் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மாத்திரமல்லாமல், அரையிறுதி ஆட்டத்தில் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியை 37 ஓட்டங்களினால் வீழ்த்தியது.

அதேபோன்று காலி கிளாடியேட்டர்ஸ் அணி ஆரம்பத்தில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவி, அவல நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

எனினும் இக்கட்டான இறுதி ஆட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வியக்கத் தக்க வகையில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மாத்திரமல்லாமல் அந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்தது.

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்ப சுற்றில் இறுதி மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும், அந்த ஆட்டங்களில் அவர்களின் கூடுதல் வீரர்களின் வலிமை அணியின் மாற்றங்களால் அளவிடப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்தமாக இரு அணிகளின் வலிமையைப் பார்க்கும்போது, துடுப்பாட்டத்தை விட இரு அணிகளின் பந்து வீச்சானது வலிமை மிக்கதாக அமைந்துள்ளது.

 

கோல் கிளேடியேட்டர்ஸ் 

யாழ்ப்பாணம் அணியின் பலம் வனிந்து ஹசரங்கவைப் போல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் மிகவும் மதிப்புமிக்க பந்து வீச்சாளர் ஆவார். 

எனினும் வர்னிந்து ஹசரங்கவைப் போல் அல்லாமல் சந்தகனின் திறன் சற்று குறைந்த நிலையில் உள்ளது. ஆனால் அவர் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதன்படி 21.00 சராசரியாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

சந்தகனைத் தவிர, பட்டியலில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தனஞ்சய லக்ஷன் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் எதிர் அணிக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

மறுமுனையில் அமீருடன் பந்து வீசிய நுவான் துஷாரா, இறுதி சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதேவேளை தனது துடுப்பாட்ட வலிமையினால் தனுஷ்க குணதிலக்க, தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக மாறியுள்ளார்.

இதுவரை போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரரான அவர், 9 போட்டிகளில் 475 ஓட்டங்களை எடுத்து இன்னிங்ஸ் சராசரியாக 67.85 ஆக உள்ளார். அத்துடன் 4 அரைசதம் அடித்த குணதிலக, 145.25 என்ற வேகத்தைத் தனதாக்கியுள்ளார்.

இருப்பினும், இன்றைய போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மேலும் அரையிறுதியில் விளையாடிய சனகா ருவான்சிரிக்கு பதிலாக மிலிண்டா சிரிவர்தேனா நியமிக்கப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. 

ஆரம்பத்தில் தனுஷ்க குணதிலக்க மாத்திரம் அணியின் ஓட்ட குவிப்புக்காக பாடு பட்டு வந்த நிலையில் இறுதி ஆட்டங்களில் அணித் தலைவர் பானுகா ராஜபக்ஷ, அசாம் கான், ஷெஹான் ஜெயசூரியா மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோரும் தங்களது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் இன்றைய போட்டியில் காலி அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

பானுக ராஜபக்ஷ

இறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த அணித் தலைவர், 

இந்த போட்டியில் எங்கள் அணியில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை நான் கூற விரும்புகிறேன். 

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் நம் ஒற்றுமையால் தான் இந்த நிலையை எட்டியுள்ளோம். மேலும், நுவான் துஷாரா அணியில் இணைந்த பிறகு, பந்துவீச்சு துறையில் ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. 

மேலும், தனஞ்சய லக்ஷன், மொஹமட் அமீர், லக்ஷன் ஆகியோர் இன்னிங்ஸின் நடுவில் வந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எனவே நாங்கள் இப்போது நல்ல சமநிலையில் இருக்கிறோம். நாளைய (இன்றைய) போட்டியில் நான் ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று பானுகா ராஜபக்ஷ கூறினார்.

 

ஜப்னா ஸ்டாலியன்ஸ்

யாழ்ப்பாணம் அணியை பொறுத்தவரையில் வர்னிந்து ஹசரங்கா அவர்களின் முக்கிய பலம். இந்த போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரரும் அவர் தான்.

தம்புள்ளை வைக்கிங்ஸுக்கு எதிரான் அரையிறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்ல வழி வகுத்தார். 

இதுவரை 9 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரால் ஒரு ஓவரில் ஓட்ட எண்ணிக்கையை 6 (5.27) க்கும் குறைவாக வைத்திருக்க முடிந்தது. 

அவரைத் தவிர, அணிக்கு அதிக பங்களிப்பு செய்த வேகப்பந்து வீச்சாளர்களில் சுரங்கா லக்மல் மற்றும் உஸ்மான் ஷின்வாரியும் உள்ளனர், மேலும் டுவைன் ஆலிவியரின் சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

துடுப்பாட்டத்தில் அவிஷ்கா பெர்னாண்டோ தனித்து நிற்கிறார். அவிஷ்கா இதுவரை 248 ஓட்டங்களை எடுத்துள்ளார். இன்னிங்ஸ் சராசரி 41.33 மற்றும் தாக்குதல் வேகம் 137.1. ஆகும்.

ஏழு இன்னிங்ஸ்களில் 18 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளை அடித்த அவிஷ்கா, போட்டிகளில் அதிக சிக்ஸர்களை பெற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆவார்.

அவிஷ்கவைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய ஜோன்சன் சார்லஸும் தான் சலைத்தவர் அல்ல என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

தொடக்க போட்டிகளில் அணித் தலைவர் திசரா பெரேராவின் அதிரடி யாழ்ப்பாண அணியின் வெற்றிகளுக்கு உதவியது. ஆனால் இறுதி சில போட்டிகளில் அவர் சில பின்னடைவுகளை சந்தித்தார். 

மிகவும் முன்னேற்பாடுகளுடன் போட்டிகளில் நுழைந்த யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸுக்கு தங்களது கிண்ண நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள திசாராவின் துடுப்பாட்டமும், ஆளுமையும் அணிக்கு பலம் சேர்ப்பதாகவுள்ளது.

 

திசர பெரேரா

இறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த அணித் தலைவர், 

நான் முன்பு கூறியது போல் நாங்கள் எந்த அணியையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டோம். 

ஏனெனில் டி 20 பெரும்பாலும் 'ஒன் மேன் ஷோ' என்று அழைக்கப்படுகிறது. ஒரு பந்து வீச்சாளரும் அதைச் செய்ய முடியும். 

எனவே ஒரே நம்பிக்கை முடிந்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். அரையிறுதிப் போட்டியில் வென்ற பிறகு, நாங்கள் ஒரு அணியாக நல்ல மனநிலையில் இருக்கிறோம் என்று திசர பெரேரா கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35