34 000 ஐ அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் :  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்க்க கோரிக்கை

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 10:52 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்று நூற்றுக்கு குறையாதளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 

இவ்வாறான நிலையில் எதிர்வரும் சில நாட்களில் உற்சவ காலம் என்பதால் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிடின் தற்போது மேல் மாகாணத்தில் காணப்படுவதைப் போன்ற நிலைமை நாட்டில் ஏனைய பகுதிகளிலும் உருவாகிவிடும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 7 மணிவரை 420 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 352 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும் , 68 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டோபர் 4 ஆம் திகதியின் பின்னர் உருவாகிய இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை 30 257 ஆக உயர்வடைந்துள்ளது.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 33 898 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 867 நபர்கள் குணமடைந்துள்ளதோடு , 8877 நபர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 510 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை

இவ்வாறு நாளாந்தம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஆங்காங்கே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களாயின் சுகாதாரத்துறையினரால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

இலங்கையில் உருவாகியுள்ள கொவிட் இரண்டாம் அலை கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரமின்றி நாட்டில் பல பகுதிகளிலும் பரவலடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் சுகாதார தரப்பினரால் தொடர்ந்தும் இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி செயலணி பல முக்கிய தீர்மானங்களை எடுத்தாலும் சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திலுள்ள குறைபாடுகள் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் கொண்டாடப்படவுள்ள உற்சவங்கள் மிகவும் அபாயமான சூழலிலேயே இடம்பெறவுள்ளது. நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்ற நிலைமை தற்போது இல்லை. எனினும் இந்த காலப்பகுதியில் அரசாங்கமும் மக்களும் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொவிட் பாரியளவில் பரவடையும் நிலைமையிலேயே நிறைவடையும் என்பது துரதிஸ்டவசமானதாகும் என்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலையீட்டுடன் இலங்கைக்கு தடுப்பூசி

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலையீட்டுடனேயே இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும். அதனைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய காலம் வரும் போது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில் 

எனவே இலங்கைக்கு தடுப்பு மருந்து கிடைத்தவுடன் குறிப்பிட்டவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகில் ஏனைய நாடுகளில் காணப்படும் தொற்று நிலைமையுடன் ஒப்பிடும் போது இலங்கை அந்தளவிற்கு அபாயமான கட்டத்தில் இல்லை. தேவையான சிகிச்சை நிலையங்களும் , தீவிர சிகிச்சை பிரிவுகளும் எம்மிடமுள்ளன. எனினும் தற்போது மக்களின் ஒத்துழைப்பே அத்தியாவசியமாகிறது.

சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்பதற்காக சமூக தொற்று என்று கூறுவது தவறாகும். காரணம் எந்த பிரதேசத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்கள் பிரிதொரு தொற்றாளருடன் தொடர்புடையவர்களாகவே உள்ளனர் என்றார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

மேல் மாகாணத்திலிருந்து பயணித்தவர்களினாலேயே ஏனைய மாவட்டங்களிலும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் , எனவே உற்சவ காலங்களில் வெளி மாவட்டங்களுக்கு செல்வதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பானர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பயணித்தவர்களால் அங்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே முடிந்தளவு மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கான பிரயாணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கோருகின்றோம்.

தவிர்க்க முடியாத காரணிகளுக்காக செல்ல வேண்டியேற்பட்டால் பெரும்லானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணாமல் அவரவர் வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்துகின்றோம். அவ்வாறில்லை என்றால் உற்சவ காலம் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை நாட்டில் ஏனைய பகுதிகளிலும் உருவாகிவிடும் என்றார்.

நேற்று திங்களன்று பதிவான மரணங்கள்

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் அதி உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51