ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி: மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிப்பு

Published By: J.G.Stephan

15 Dec, 2020 | 05:58 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 8 மாதங்களாக சி.ஐ.டி. தடுப்பில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை, தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றில், சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக்கொள்ள, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்குமாறு சி.ஐ.டி. பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில்  பரிசீலனைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர தனிப்பட்ட காரணிகளுக்காக விலகியதையடுத்து, இன்று இம்மனு பிரியந்த பெர்ணான்டோ மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைகள் தொடர்பில்  சட்டத்தரணி சலன பெரேரா தாக்கல் செய்துள்ள மனுவில்,சி.ஐ.டி.யின்  பணிப்பாளர், விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்டோர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுசந்த ஆஜரானார்.

 அவர், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை  தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் நாளை பி.ப.2.30 மணிக்கு அவரை சந்திக்க முடியும் எனவும் நீதிமன்றுக்கு அறிவித்தார். அத்துடன் குறித்த மனுவூடாக கோரப்பட்டுள்ள நிவாரணம் தற்போதும் கிடைத்துவிட்டதால் மனுவை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரினார்.

 எனினும் சட்டத்தரணி சலன பெரேரா தாக்கல் செய்த மனு தொடர்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நாளை  சட்டத்தரணி ஹிஜாஸை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும், தொடர்ந்து வரும் நாட்களில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதால், அவ்வாறு சந்தர்ப்பம் மறுக்கப்படும் போது அது தொடர்பில் மன்றுக்கு அறிவிக்கக் கூடியதான வழி முறையாக, இம்மனுவை தள்ளுபடி செய்யாமல் தற்காளிகமாக மூடி வைக்குமாறு கோரினார்.

 இந்நிலையில் இது குறித்த ஆராய்ந்த நீதிபதிகள், மனுவில் கோரப்பட்டுள்ள சலுகைகள் கிடைத்துள்ளதால் குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாகவும், மீளவும் சேவை பெறுநரை சந்திக்க சட்டத்தணிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டால் அது தொடர்பில் புதிய மனுவூடாக தெரிவிக்க முடியும் எனவும் அறிவித்தது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆந் திகதி சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் எதுவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது சட்டத்தரணிகள்  மனு மீதான விசாரணையின் போது தெரிவித்திருந்தனர்.

சட்ட உதவியை முறையாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட சந்தர்பங்களில் சி.ஐ.டி ஒருவரின் மேற்பார்வையுடன் அதிக கட்டுப்பாடுகளுடனே உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

 இவரது கைது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உள்ளூர் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட பல கட்சிகளும் அறிக்கைகள் வெளியிட்டிருந்தன.

 இந்நிலையிலே மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய தற்போது சட்டத்தரணிகளைச் அந்திக்க ஹிஜாஸுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47