யாழ். மருதனார்மடம் சந்தைக்கு சென்றவர்களுக்கான அறிவிப்பு

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 04:42 PM
image

கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்  பரிசோதனையில் 39 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் உடுவில் பிரதேச செயலகப் பகுதியில் மட்டுமற்றி யாழ்ப்பாணத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் தமது நாளாந்த தேவைகளுக்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மக்கள் மட்டுமன்றி ஏனையோரும் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.

எனவே கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருடன்  குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது கிராம சேவை உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர்  பரிசோதனையும் செய்துகொள்ள முடியும். 

அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 012 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களுக்குரிய விபரங்களை தெரியப்படுத்துவீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22