வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

Published By: Vishnu

16 Dec, 2020 | 07:34 AM
image

வாகனங்களுக்கான இலக்க தகடுகளை வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை அகற்றுவதன் மூலம் பயனாளிகளுக்கு இலகுவான முறையில் வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளமையை தவிர்க்கும் முகமாகவே இப் பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2020.12.14 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

05. மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை அகற்றுவதன் மூலம் பயனாளிகளுக்கு இலகுவான முறையில் வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பொறிமுறையை தயாரித்தல்

வாகனங்களைப் பதிவு செய்யும் போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதனால் புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக அமைந்தாலும் மாகாணங்களுக்கிடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. 

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு. 

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55