13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் இரண்டு குழந்தைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் வேறு நபரொருவருடன் திருமணம் முடித்து சென்றுள்ள நிலையில், குறித்த சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுமி, தனது சகோதரியுடன் சந்தேக நபரின் வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க சென்றுள்ளார்.இந்நிலையில் குறித்த சிறுமியும், அவரின் சகோதரியும் தொலைக்காட்சியினை பார்த்தவாறு  அயர்ந்து தூங்கியுள்ளனர்.

இதன் போது வீட்டுக்கு வந்த குறித்த சந்தேக நபர், சிறுமியை படுக்கையறைக்கு தூக்கி சென்று அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தினை சிறுமி, தனது தந்தையிடம் தெரிவித்துள்ளதையடுத்து முந்தலம் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.