ஹசரங்கவின் சுழலில் சிக்கி வெளியேறிய தம்புள்ளை ; இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்

Published By: Vishnu

15 Dec, 2020 | 10:35 AM
image

மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வர்னிந்து ஹசரங்கவின் சுழல் பந்து வீச்சு மூலம் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியை அடி பணிய வைத்த யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்றிரவு 7.00 மணிக்கு தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் மற்றும் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் ஜோன்சன் சார்ல்ஸ் 56 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் தம்புள்ளை அணி சார்பில் மெலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளையும், லஹரு குமார, ரமேஸ் மெண்டீஸ் மற்றும் அன்வர் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

166 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியானது யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி 19.1 ஓவரை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

தம்புள்ளை அணி சார்பில் உபுல் தரங்க 33 ஓட்டங்கயைும், நிரோஷன் திக்வெல்ல 29 ஓட்டங்களையும், ரமேஸ் மெண்டீஸ் 26 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

யாழ்ப்பாணம் அணி சார்பில் பந்து வீச்சில் வர்னிந்து ஹசரங்க மொத்தமாக 4 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு, 15 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 3 விக்கெட்டுகளை பெற்றார்.

இதன் மூலம் தொடரில் ஹசரங்க மொத்தமாக 16 விக்கெட்டுகளை எடுத்து முன்னணியில் உள்ளார்.

அது தவிர தனஞ்சய டிசில்வா, சுரங்க லக்மால், சரித அசலங்க, டுவென் ஆலிவர் மற்றும் சதுரங்க டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்த யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியானது, இறுதிப் போட்டியில் கிண்ணத்துக்காக காலி காலி கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இறுதிப் போட்டியானது நாளை மறுதினம் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41