3 இலட்சம் அமெரிக்கர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

15 Dec, 2020 | 11:01 AM
image

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலினால் அமெரிக்கா அளவிட முடியாத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.

‘பைசர்’ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) அனுமதி அளித்துள்ள நிலையிலும்  குளிர்காலம் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 2,200 உயிரிழப்புக்களை பதிவுசெய்த அமெரிக்கா, டிசம்பர் 9 ஆம் திகதி முதல் முறையாக ஒரே நாளில் 3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் 300,267 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் ஒரு கோடியே 65 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்கள் சற்றே அதிக விகிதத்தில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் சற்றே அதிக விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

ஆனாலும், ஆண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (61.7%) மற்றும் உயிரிழப்புகள் (54.1%) ஆகியவற்றின் உயர் விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மிகச் சமீபத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி, 80% இறப்புகள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றன.

அமெரிக்க வெகுஜன தடுப்பூசி திட்டத்தின் முதல் ஊசி நேற்று திங்கட்கிழமை காலை  நியூயோர்க்கின் குயின்ஸில் உள்ள மருத்துவ நிலையத்தில் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59