வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 12:13 AM
image

வவுனியாவில் இன்றையதினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இன்றையதினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகின்றது.

இவற்றைவிட பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் வவுனியா தெற்கு வலயத்தை சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை இடை நிறுத்துவதாக வவுனியா தெற்கு வலய கல்விபணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இறம்பைக்கும் மகளீர் மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதேவேளை கற்குழி மற்றும் திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56