கூகிளின் ஜிமெயில், யூடியூப், வரைபடங்கள் மற்றும் பிற சேவைகள் சிறிது நேரம் முடங்கியது

Published By: Digital Desk 3

14 Dec, 2020 | 07:09 PM
image

ஜிமெயில் மற்றும் யூடியூப் உள்ளிட்ட கூகிளின் முக்கிய சேவைகள் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு சிறிது நேரம் முடங்கியது. இது குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பலர் புகார் அளித்து வந்தனர்.

அத்துடன் மேலும் டுலிட்டரில் #googledown #YouTubedowm #googlemapsdown போன்ற ஹேஷ் டேக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

முடக்கம் குறித்து கூகிள் சேவைகளில் வந்த சில பதிவுகள்.

கூகிள் டொக்ஸ்

கூகிள் டொக்ஸ் பயனர்கள் “கூகிள் டொக்ஸில் பிழை. தயவுசெய்து இந்தப் பக்கத்தை மீண்டும் முயற்சிக்கவும் அல்லது சில நிமிடங்களில் மீண்டும் வரவும் என தெரிவித்துள்ளது.

யூடியூப்

”யூடியூப் அதன் பிழைப் பக்கத்தை ஒரு குரங்குடன் காண்பித்து, ஒரு தேடல் பட்டியுடன் ஏதோ தவறு நடந்தது ’என தெரிவித்துள்ளது.

ஜிமெயில்

ஜிமெயிலைப் பொறுத்தவரை, மன்னிக்கவும், ஆனால் உங்கள் கணக்கு தற்காலிகமாக கிடைக்கவில்லை. சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்க பரிந்துரைக்கிறோம்  என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உங்களில் பலருக்கு இப்போது யூடியூப் அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம் - எங்கள் குழு அறிந்திருக்கிறது மற்றும் அதைப் சரிபார்க்கிறது. எங்களிடம் கூடுதல் செய்திகள் வந்தவுடன் உங்களுக்கு இங்கு வழங்குவோம் என யூடியூப் தளம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. 

இவ்வாறு தெரிவித்த சிறிது நேரத்தில் மீண்டும் அனைத்து சேவைகளும் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டொக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

மேலும், கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற கூகுள் பயன்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26