அனுராதபுரம் சென்ரல் ஹில் பாலத்திற்கு அருகில் மது போதையில் இருந்த பாடசாலை மாணவியொருவரை அனுராதபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அவசர அழைப்பொன்றின் மூலம் தகவலை பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் குறித்த மாணவியை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

அனுராதபுரம் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதான மாணவியொருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அதிகளவிலான மது போதையில் இருந்த காரணத்தினால் குறித்த மாணவியை பொலிஸார் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.