சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று: முடக்கம் தொடர்கிறது...!

Published By: J.G.Stephan

14 Dec, 2020 | 03:59 PM
image

கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி நேற்றுமுன்தினம் காலை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்று உறுதியான இருவரிடத்திலும் நெருங்கி பழகியவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் பகுதியின்  முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் அமைந்துள்ள அல்அக்சா பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19