அமைச்சர் விமலின் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம்

Published By: Digital Desk 4

14 Dec, 2020 | 07:23 PM
image

(நா.தனுஜா)

உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவுசெய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தி மேலும் இலகுபடுத்தும் நோக்கில் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபையினால் 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற புதிய செயற்திட்டமொன்று நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

மேற்படி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று திங்கட்கிழமை குறித்த அதிகாரசபையினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அதில் கலந்துகொண்டு, குறித்த செயற்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சரியான சந்தையைத் தெரிவுசெய்வதிலும் உற்பத்திகளை அங்கு கொண்டுபோய் சேர்ப்பதிலும் நீண்டகாலமாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபை 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற முக்கிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்திருக்கிறது.

உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவுசெய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இச்செயற்திட்டத்தின் கீழ் முறைமைப்படுத்தப்படுவதோடு இலகுபடுத்தப்படவுள்ளன. 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் தொடர்பான தகவல்களைத் தற்போது சேகரித்துவருகின்றனர். இந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தக்கூடிய வகையிலான இணையப்பக்கமொன்று உருவாக்கப்படவுள்ளது. 

அதேபோன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்திற்கான கொள்வனவு நிலையங்களை அமைப்பதற்கான இயலுமையுள்ள தனியார் முதலீட்டாளர்கள் தொடர்பிலும் மதிப்பீடுசெய்து வருகின்றோம், எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48