2 ஆவது போட்டியிலும் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து

Published By: Vishnu

14 Dec, 2020 | 12:23 PM
image

மேற்கிந்தியத்தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் தரவரிசையில் நியூஸிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக நியூஸிலாந்து-மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நியூஸிலாந்தில் நடைபெற்றது.

தொடரின் 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ஓட்டங்களை குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ஓட்டங்களை பெற, வாக்னர் 66 ஓட்டங்களை அணி சார்பில் அதிகபடியாக எடுத்தார்.

 பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேப்ரியல் , அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

அடுத்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி நியூஸிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சுகளில் தாக்கு பிடிக்க முடியாது முதல் இன்னிங்ஸுக்காக 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் நியூசிலாந்து டிம் சவுத்தி, ஜேமிசன் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன் பின்னர் பாலோஆன் ஆன மேற்கிந்தியத்தீவுகள் அணி 329 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

அந்த இன்னிங்ஸிலும் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திக்குமுக்காடியது மேற்கிந்தியத்தீவுகள். தொடக்க ஆட்டக்காரர் ஜோன் கேம்பெல் 68 ஓட்டத்துடனும், அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 61 ஓட்டத்துடனும், விக்கெட் காப்பாளர் ஜோஷ்வா டி சில்வா 57 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 79.1 ஓவரில் 317 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் போல்ட், நீல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி மற்றும் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹென்றி நிகோலசும், தொடர் நாயகனாக ஜேமிசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரை அந்த அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அவுஸ்திலேிய அணி முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07