விமான நிலைய திறப்பின் பின்னர் உருவாகும் கொத்தணிகளை அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்தும்?: சம்பிக்க

Published By: J.G.Stephan

14 Dec, 2020 | 10:36 AM
image

(எம்.மனோசித்ரா)

விமான நிலையத்தை திறந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துமளவிற்கு இலங்கையில் நுட்பமான செயன்முறைகள் எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் உருவாகக் கூடிய கொத்தணிகளை கட்டுப்படுத்த கூடியவாறு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார்.  

அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்தை திறந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துமளவிற்கு இலங்கையில்  நுட்பமான செயன்முறைகள் எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமல்ல. குறைந்தபட்சம் கொழும்பில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையே அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது.

உக்ரைனிலிருந்து வந்த நபரொருவரால் தான் இலங்கையில் இரண்டாவது அலை ஏற்பட்டது என்று அரசாங்கம் தான் கூறுகிறது. மினுவாங்கொடை கொத்தணியின் பின்னர் சுமார் 30,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் உருவாகக் கூடிய கொத்தணிகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் தற்போது வரையில் இல்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நாம் விரும்பும் நேரத்தில் எதனையும் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் எண்ணமே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04