தம்மிக பண்டாரவின் பானத்தை 'போசணை நிறைந்த ஆயுர்வேத பானம்' என்றே பரிந்துரைத்தோம்: சிசிர ஜயக்கொடி

Published By: J.G.Stephan

13 Dec, 2020 | 01:07 PM
image

(நா.தனுஜா)
தம்மிக பண்டார என்ற நபரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பானத்தை 'போசணை நிறைந்த ஆயுர்வேத பானம்' என்ற அடிப்படையிலேயே நாம் பரிந்துரை செய்தோம். எனினும் அது உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும் என்று சுதேச வைத்தியமுறை மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் கூறியிருப்பதாவது, நான் அதனை அருந்துவதற்கு சபாநாயகருக்கு மாத்திரமே அழைப்புவிடுத்தேன். ஒட்டுமொத்த பாராளுமன்றத்திற்கும் அதனை வழங்கவில்லை. அத்தோடு போசணை நிறைந்த ஒரு ஆயுர்வேத பானம் என்ற அடிப்படையிலேயே நாம் அதனை வழங்கினோம். எமது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத பானங்கள் மற்றும் உணவுகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சத்தை விதைத்து வருகின்றனர். 

ஆனால், அவ்வாறு அச்சப்படுவதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை. அந்த ஆயுர்வேத பானம் உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்தாக மாறும். அதற்கு குறித்தவொரு காலம் அவசியமாகும். அத்தோடு தம்மிக பண்டார மாத்திரமன்றி எமது நாட்டிலுள்ள மேலும் பல ஆயுர்வேத நிலையங்களும் மருத்துவர்களும் தமது உற்பத்திகளைக் கையளித்திருக்கிறார்கள். அவை தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43