பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விவகாரம்: ஜனாதிபதி, பிரதமரின் முரண்பட்ட கருத்துக்கள் -மின்சாரத்துறை வல்லுநர்கள்

Published By: J.G.Stephan

13 Dec, 2020 | 12:11 PM
image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தையும் மின்சார சபை சட்டத்தையும் துரித கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான விதத்தில் திருத்தி அமைப்பதற்கு முன்மொழிவதாக 2021 வரவு – செலவு திட்ட உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். எனினும் அந்த முன்மொழிவை புறக்கணிக்கும் வகையில் ஜனாதிபதி செயலாளர் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் ஆணைக்குழுவை மூடுவதற்குரிய தன்னிச்சையான தீர்மானத்தை தெரிவித்திருப்பது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முரண்பட்ட கருத்துக்களை காண்பிப்பதாக மின்சார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்விடயம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் மின்சார துறையில் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய விடயங்களை மையமாக கொண்டு மேற்கொண்டு வருகின்ற சுயாதீன ஆணைக்குவாக இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழு இருக்கிறது. இந்த குழுவை மூடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளரினால் திறைசேரியின் செயலாளருக்கு கடந்த முதலாம் திகதியிடப்பட்ட கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

அதனை தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழுவின் உறுப்பினர்களை பதவி விலகுமாறு திறைசேரியின் செயலாளரினால் தொலைபேசியினூடாக தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய அன்றைய தினமே இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை அமைச்சுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விடயத்தை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுவின் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்.

தனது இராஜினாமா கடிதத்தை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பதிலாக ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு  அமைச்சருக்கே உண்டு. இது தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 35 ஆவது இலக்க இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுச் சட்டத்தில் 1 (1), 3 (1) 4, 6 (1), 6 (4), ஆகிய பிரிவுகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழு நிதியமைச்சின் கீழ் இருக்கின்ற நிலையில் அமைச்சிற்கு பொறுப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையின்  ஒருமைப்பாட்டுடன் நியமிக்க வேண்டியவராக உள்ளார். குறித்த வெற்றிடங்களை  சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11