( மயூரன் )

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் தாய்ப்பால் அருந்திய குழந்தையொன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

திருநெல்வேலி , பாரதிபுரத்தைச் சேர்ந்த சிவதாசன் கிசானா  எனும் இரண்டரை மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது குழந்தைக்கு தாய்ப்பாலினை ஊட்டிய தாய் , குழந்தையை நித்திரையாக்கி விட்டு ,  அதன் பின்னர் சமையல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

குழந்தை நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்து எழும்பாத நிலையில் , சமையல் வேலைகளை  முடித்துக்கொண்டு குழந்தையை தூக்கிய வேளை குழந்தை அசைவின்றி உடல் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில், உடனடியாக குழந்தையை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதா தெரிவித்துள்ளார். 

தாய்ப்பால் கொடுத்த பின்னர் , குழந்தையை படுக்க வைத்தமையால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.