இந்தியாவில் டெல்லியருகே காரில் பயணித்து கொண்டிருந்த தாய், மகள் இருவரையும் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் வழியாக டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலையில் நொய்டாவைச் சேர்ந்த தாயும் மகளும் காரில் சென்றனர். 

அப்போது வீதியோரம் இருந்த 15 இற்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு குழு அந்த காரின் மீது கற்களை வீசி எரிந்தன.

இதனால் குறித்த கார் நின்றதும் அந்த குழுவினர் துப்பாக்கி முனையில் காரில் பயணித்தவர்களை மிரட்டி அருகே இருந்த வயலுக்கு அழைத்து சென்று அவர்களிடம் இருந்த பணம், நகைகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையடித்ததுடன் அக்காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டுவிட்டு 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கி முனையில் எல்லோரும் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தற்போது இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைத்துள்ளனர்.