இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், ஐ.சி.சி.யினால் நேற்று வெளியிடப்பட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் முதலாவது இன்னிங்ஷில் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் 2 ஆவது இன்னிங்கில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து அவர் ஐ.சி.சி.யினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, முதலாவது இடத்தில் இந்திய அணியின் அஷ்வினும் 2 ஆவது மற்றும் 3 ஆவது  இடங்களில் இங்கிலாந்து அணியின் அண்டர்சனும் புரோட்டும் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 17 வருடங்களின் பின் இலங்கை அணி  பெற்றுக்கொண்ட 2 ஆவது வெற்றி என்பதுடன் இதற்கு முன்னர் இலங்கை அணி 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.