22, 30 ஆம் திகதிகளில் இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை

Published By: Digital Desk 3

12 Dec, 2020 | 11:20 AM
image

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள்,இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை வலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை காத்திரமான பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் கடல் வளங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, குறித்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரத்தினை இழக்க கூடாது என்ற அடிப்படையில் புதிய பொறிமுறை ஒன்றினை தயாரித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த திட்ட வரைபினை இந்தியப் பிரதமரிடம் கையளித்திருந்தார்.

குறித்த திட்டம் தொடர்பாக இந்தியத் தரப்பினரால் திருப்தி தெரிவிக்கப்பட்டதுடன். கடந்த 2016 மற்றும் 2018 ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து, குறித்த விவகாரத்திற்கு நிரந்தரை தீர்வினை காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்பட்ட கொவிட் 19 காரணமாக உலகளாவிய ரீதியில் தோன்றிய அசாதாரண சூழல் காரணாமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சாவார்த்தைகள் இழுபட்டு வந்ததையடுத்து கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினையடுத்து எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் காணொளி ஊடாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இலங்கை இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34