தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அமெரிக்காவால் புதிய செயற்திட்டம்

Published By: Digital Desk 4

11 Dec, 2020 | 08:32 PM
image

(நா.தனுஜா)

இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் 3.6 பில்லியன் ரூபா பெறுமதியிலான செயற்திட்டமொன்று அமெரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தினால் நிதியளிக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிறுவணிக முயற்சிகளுக்கு அவசிமயான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதனூடாக ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் புதிய சிறுவணிக முயற்சிகள் உருவாக்கப்படுவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

'நிலைபேறான பொருளாதார வளர்ச்சியில் தனியார்துறையினரின் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் வணிகங்களின் இலாபத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்குப் பங்களிப்புச்செய்வதற்கான அமெரிக்காவின் கடப்பாடு இந்த செயற்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும்' என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்திருக்கிறார். 

அதுமாத்திரமன்றி சரியான தருணத்தில் வழங்கப்படும் இந்த உதவி கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58