கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதாலேயே மலையகம் பாதுகாக்கப்படுகின்றது - ராமேஷ்வரன் 

Published By: Digital Desk 4

11 Dec, 2020 | 05:59 PM
image

கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

" இந்தியா அரசாங்கத்தால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். 

திட்டம் சிறப்பாக செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலர் அத்திட்டத்தை தமக்கு ஏற்றவகையில் செய்தனர். உட்கட்டமைப்பு வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. இலங்கை அரசாங்கம்தான் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவேண்டும் என்பது ஒப்பந்தமாகும்

தற்போது குறைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு வீடுகளை முழுமையாக கையளிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை ஜீவன் தொண்டமான் முன்னெடுப்பார்.

அத்துடன் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். எந்தவொரு திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்போம். நல்லாட்சியின்போதுதான் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றன. துமிந்த சில்வா போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் இருந்த கட்டத்துக்குகூட பெயரை மாற்றுவதற்கு முயற்சித்தனர்.

 அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இருப்பதால்தான் மலையகம் காப்பாற்றப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் காணிகள் பறிபோயிருக்கும். இன்று தொழில்சார் பிரச்சினைகளை இலகுவில் தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்தமே காரணமாக இருக்கின்றது. 

எதிரணியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒப்பந்தம் இல்லாமல் இருப்பது நன்மையாக இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கும், காங்கிரஸசுக்கும் அது அவசியம்.  பெருந்தோட்டத்துறை கௌரவமானதொரு தொழில்துறையாக மாற்றியமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22