முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

11 Dec, 2020 | 05:58 PM
image

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் நேற்று (10.12.2020) மாலை 7  மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இலியாஸ், புத்தளம் நகரசபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சலீம்கான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி, புத்தளம் நகர் ஊடாக தபால் நிலைய சுற்றுவட்டம் வரை சென்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களையும், உடல் வடிவ பொம்மை ஒன்றையும் கையில் ஏந்திய நிலையில் பேரணியாக சென்றனர்.

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுகட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது, இலங்கையில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுவது பெரும் அநியாயமாகும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08