முன்னறிவித்தல்களை ஏற்று பாதுகாப்பாக இருந்தபோதும் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு - கிளிநொச்சி மாவட்ட உதவிப்பணிப்பாளர்

Published By: Digital Desk 3

11 Dec, 2020 | 03:19 PM
image

கிளிநொச்சி பூநகரி கடற்தொழிலாளர்கள், எங்களால் வழங்கப்பட்ட முன்னறிவித்தல்களை ஏற்று பாதுகாப்பாக இருந்தபோதும் எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பணிப்பாளர் கா.மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வீசிய புரெவிப்புயல் காரணமாக கிளிநொச்சி வலைப்பாடு மற்றும் அதனை அண்மித்த கடற்பிரதேசங்களில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு களவிஜயம் மேற்கொண்டு தகவல்களை திரட்டி வரும் நிலையில் இது தொடர்பில் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று (11.12.2020)) குறித்த மதிப்பீடு தயாரிக்கும் பணியில் குறித்த குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்தொழிலாளர்களுக்கு முன்னறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் அதனை ஏற்று பாதுகாப்பாக இருந்தபோதும் எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தம் கூடிய  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது படகுகள் வலைககள் மற்றும் இந்தப் பிரதேசத்தில் பிரதானமாக காணப்படுகின்ற அட்டை வளர்ப்பு பாசி வளர்ப்பு என்பன முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.

இவையாவும் சீரான கடலில் வளர்க்கப்படுகின்றவை. இவ்வாறு வீசிய காற்று வெள்ளம் என்பவற்றால் பெரும் பாதிப்படைந்துள்ளது என்பவற்றை நாங்கள் மேற்கொண்ட களஆய்வுகளின் போது கண்டுள்ளோம்.

இது தொடர்பான அழிவு மதிப்பீடுகளை உரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களிடம்  திரட்டி வருகின்றோம்.

இந்தப்பிரதேசங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்களின் படகுகள் வலைகள் வள்ளங்கள் அனைத்தும் பாதுகாப்பாக கரைகளில் வைக்கப்படடிருந்தபோதும் அவை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

அட்டைப் பண்ணைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. எந்த ஒரு பண்ணையும் அழிவடையாமல் இல்லை. இவ்வாறான சேதவிபரங்களை மிக அவதானமாக திரட்டி வருகின்றோம். 

அதாவது  பிழையான தகவல்கள் சேர்க்கப்படக்கூடாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடக்கூடாது என்பதிலும் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். 

அதிகளவான பாதிப்புக்கள் என்பதால் இவ்வாறான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு காலம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32