தனுஷ்கவின் அதிரடியுடன் கண்டியை வெளியேற்றிய காலி

Published By: Vishnu

11 Dec, 2020 | 12:21 PM
image

மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி கண்டி டஸ்கர்ஸ் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதிக்கு கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

இந் நிலையில் அரையிறுதிக்கு நுழையும் நான்காவது அணி எது என்பதை தீர்மானிப்பதற்கான தீர்க்கமான போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதனாத்தில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

அணி சார்பில் குசல் மெண்டீஸ் 42 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் காலி அணி சார்பில் மொஹமட் அமீர், நுவான் துஷார, தனஞ்சய லக்ஷான் மற்றும் சஹான் அராச்சிகே ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகான் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

127 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காலி அணியானது 17 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் ஹஸ்ரத்துல்லா ஸசாய் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தனுஷ்க குணதிலக்க 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களுடனும், அஸான் அலி இரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் காலி அணியானது பட்டியில் நான்காவது இடத்துக்கு முன்னேறியதுடன், கண்டி அணியை தொடரிலிருந்து வெளியேற்றி அரையிறுதி சுற்றுக்குள்ளும் நுழைந்தது.

இதேவேளை நேற்று பிற்பகல் இடம்பெற்ற எல்.பி.எல். தொடரின் 18 ஆவது போட்டியில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதின.‍

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

‍கொழும்பு அணி சார்பில் வெற்றிக்கு அடித்தளமிட்ட லாரி எவன்ஸ் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிக்ள அடங்கலாக 108 ஓட்டங்களை பெற்றார்.

எல்.பி.எல். தொடரில் வீரர் ஒருவர் பதிவுசெய்த முதல் சதம் இது என்பதுடன், இருபதுக்கு : 20 போட்டிகளில் லாரி எவன்ஸ் பதிவு செய்த அதிகபடியான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.

174 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் கொழும்பு கிங்ஸ் அணியானது 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் யாழ்ப்பாணம் அணி தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியை எதிர்கொண்டது.

இந் நிலையில் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று இடம்பெறும் இறுதி லீக் அட்டத்தில் தம்புள்ளை வைக்கிங்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21