அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை மீட்டெடுப்போம் - கெஹலிய ரம்புக்வெல 

Published By: Digital Desk 4

10 Dec, 2020 | 09:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2005 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும் போது  யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடிந்ததோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை மீட்டெடுப்போம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபையில் தெரிவித்தார்.

Articles Tagged Under: கெஹலிய ரம்புக்வெல | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார், 

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சியில் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்ட வேலைத்திட்டங்கள் நல்லாட்சி காலத்தில் நிறைவுக்கு வரும் என நான் நம்பினேன், ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் தோல்வியில் முடிவடைந்தது. எனினும் எமது வரவு செலவு திட்டம் உண்மையாகும்.

அதனை அடுத்த ஆண்டே பார்க்க முடியும். இப்போது அனுபவம் உள்ள குழுவொன்று ஆட்சியை கையில் எடுத்துள்ளது. 2005 ஆம் ஆண்டு எவ்வாறு நாட்டினை ஒரு திட்டத்திற்குள் கொண்டுவர முடிந்ததோ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடிந்ததோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை மீட்டெடுப்போம். ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நாட்டிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் நாட்டின் அபிவிருத்தியில் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இந்த நிலையில் பிரிவினைவாத அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்குகின்றது. ஆனால் நாம் சகல மக்களையும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக வாழ நாம் விரும்புகின்றோம். 

ஆனால் ஒரு சிலர் அதனை குழப்ப நடவடிக்கை எடுக்கின்றனர். கொவிட் நிலைமையில் நாட்டினை மீட்டுள்ளோம். வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றது, வீதி அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுகின்றது. இவை அனைத்துமே வெறும் வாய் வார்த்தைகள் அல்ல, எனினும் இதனை தாங்கிக்கொள்ளாத நபர்கள் எம்மை விமர்சித்து வருகின்றனர், 

எனினும் மக்கள் எதற்காக எமக்கு வாக்களித்தனரோ அதற்கான நோக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம். எமது வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02