இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் அணிக் குழாமில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வல் நீக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக இடம்பெற்ற 10 ஒருநாள் போட்டிகளில் மெக்ஸ்வலின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 11.80 என குறைவடைந்துள்ள காரணத்தினால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து கிலேன் மெக்ஸ்வல் மட்டுபடுத்தப்பட்ட போட்டியொன்றில் நீக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.