"சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள்": யாழில் கவனயீா்ப்பு போராட்டம்

Published By: J.G.Stephan

10 Dec, 2020 | 03:58 PM
image

சா்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் யாழ்ப்பாணம் நாவலா் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் கள அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இன்றுகாலை(10.12.2020) 9 மணி ஆரம்பமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் போராட்டம் சிலமணி நேரங்கள் இடம்பெற்று இறுதியில் குறித்த அலுவலகத்தில் மகஜா் ஒன்றும்  கையளிக்கப்பட்டது.

போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், 

"சா்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள்" "உண்மைகளை கண்டறிந்து சொல்லாவிட்டால் நாங்களே தற்கொலை செய்வோம் எனவும், 

இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனர். இன்றைய குறித்த போராட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனா்.

அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுக்கு ஆதரவளித்திருந்தார்.

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் காவல்துறையினரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52