ஒரு­நா­ளைக்கு 100 ரூபா சம்­பளமே : 2500 ரூபா சம்பள உயர்வு மிகைப்படுத்தப்பட்டுள்ளது.!

Published By: Robert

01 Aug, 2016 | 09:40 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு, கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் சில மலை­யக அர­சி­யல்­வா­திகள் கற்­பனை உலகில் சஞ்­ச­ரிக்­கின்­றனர் என இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும், எம்.பி.யுமான முத்­து­சி­வ­லிங்கம் தெரி­வித்தார்.

ஒரு­நா­ளைக்கு 100 ரூபா சம்­பளமே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளதே தவிர 2500 ரூபா என்­பது மிகைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், தேர்­த­லுக்கு பின்னர் ஒன்­றரை வரு­டங்­க­ளாக அர­சுடன் கூட்டுச் சேர்ந்­துள்ளோர் கற்­பனை உல­கத்­தி­லேயே சஞ்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­கள்தான் இன்று கூட்டு ஒப்­பந்தம் மற்றும் 2500 ரூபா சம்­பள உயர்வு தொடர்­பிலும் கன­வு­க­ளி­லி­ருந்து கொண்டு சவால் விடுக்­கின்­றனர்.

பெருந்­தோட்ட தொழிற்­துறை என்­பது உற்­பத்­தி­யுடன் தொடர்­பு­பட்­டது. இன்று மத்­திய கிழக்கில் தோன்­றி­யுள்ள யுத்தச் சூழ்­நி­லையால் இலங்­கை­யி­லி­ருந்து தேயிலை கொள்­வ­னவு செய்­வது குறைந்­துள்­ளது. இதனால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்­வினை வழங்க முடி­யாது என முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கூறு­கி­றது. சம்­பள உயர்வு தொடர்பில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் பல­சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். ஆனால் அனைத்தும் தோல்­வி­ கண்­டன.

எனவே சம்­பள உயர்வு தொடர்­பாக கையெ­ழுத்­தி­டப்­படும் கூட்டு ஒப்­பந்­தமும் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அர­சாங்கம் வங்­கி­க­ளி­னூ­டாக தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு கடனை வழங்கி தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை வழங்க சம்­ம­தித்­தது. இதற்­க­மைய தொழி­லா­ளர்கள் வேலைக்கு சமு­க­ம­ளித்தால் மட்டும் ஒரு நாளைக்கு 100 வீதம் சம்­பளம் அதி­க­மாக வழங்­கப்­படும்.

எனவே 2500 ரூபா சம்­பள உயர்வு என்­பது மிகைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும். எதிர்­வரும் நாட்­களில் மூன்று திட்ட வரை­புகள் அடிப்­ப­டையில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் இ.தொ.கா. பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளது என்றும் அவர் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55