'ராக்கி'யை வெளியிடும் நயன்தாரா

Published By: Digital Desk 3

10 Dec, 2020 | 01:40 PM
image

'தரமணி' படப் புகழ் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ராக்கி' படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கியிருக்கும் பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்கள்.

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ராக்கி'.

'தரமணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் வசந்த் ரவி,  கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா நடித்திருக்கிறார்.

சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, தர்புகா சிவா இசை அமைத்திருக்கிறார்.

கேங்ஸ்டர்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து தொடங்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறார்கள். இதன் காரணமாக இப்படத்திற்கு திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37