2021 வரவுசெலவுத் திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பு இன்று!

Published By: Vishnu

10 Dec, 2020 | 10:38 AM
image

2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

2021 ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதையடுத்து பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றில் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 1.40 மணியளவில் முன்வைக்கப்பட்டது.

பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டதையடுத்து கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து 2021 வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 151 வாக்குகள் ஆதரவாகவும், 52 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வரவுசெலவுத்திட்ட குழு நிலை அமர்வு கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி (இன்று) வரை இடம்பெற்று வருவதுடன், வரவுசெலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 05.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44