கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்திய இளைஞனுக்கு வாள் வெட்டு

Published By: Digital Desk 3

10 Dec, 2020 | 11:37 AM
image

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில்  கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்திய செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு இடம்பெற்றது.

கடந்த திங்கட்கிழமை ஒன்பது மணியளவில் கட்சன் வீதியில் வைத்து குறித்த இளைஞன் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களது கிராமத்தில் இடம்பெற்று வந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொலிஸாரின் உதவியுடன்  நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.

இளைஞர்களின் நடவடிக்கை காரணமாக பல கசிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த இளைஞர்கள் மீது கோபம் கொண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்படுகின்ற குழுவினர் இந்த இளைஞர்கள் தனித்தனியாக பயணிக்கின்ற போது அவர்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில் தான் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07