கொரோனா பரவியமை தொடர்பில் அமெரிக்க ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு 

09 Dec, 2020 | 02:51 PM
image

  • சீனாவில் வைரஸ் முதலில்  அடையாளம் காணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாக 2019 டடிசம்பர் நடுப்பகுதியளவில் அமெரிக்காவில் கொவிட்-- 19 பரவியிருக்கக்கூடியது சாத்தியம்.
  • ஸ்பெயினில் 2019 மார்ச் 12 கழிவுநீர் மாதிரியல் வைரஸின் உயிரணுவில் உள்ள கீற்றுக்களின் முழுமையான தொகுதி (Genome ) கண்டுபிடிக்கப்பட்டதைப்போன்ற அதிகரிக்கும் சான்றுகள் முன்பு நினைத்ததை விடவும் முன்கூட்டியே சீனாவுக்கு வெளியே கொவிட் -- 19 சுழற்சியில் இருந்திருக்கிறது என்பதை காட்டுகின்றன.
  •  வைரஸின் மூலமுதலை (Source)அடையாளம் கண்டுபிடிப்பது என்பது ஒரு கடுமையான விஞ்ஞான விவகாரம்.வைரஸ் பற்றி  முதலில் அறிவித்ததை வைத்துக்கொண்டு அதன் மூலமுதல் சீனாவின் வூஹான் நகரம் என்று அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
  • வரலாற்று ரீதியாக நோக்கும்போது முதலில் வைரஸைப் பற்றி அறிவிக்கப்பட்ட இடமே அதன் மூலமுதலாக பெரும்பாலும்  இருந்ததில்லை

பெய்ஜிங் / வொஷிங்டன் , (சின்ஹாவா); சீனாவில் முதலில் வைரஸ் அடையாளம் காணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாக 2019 டிசம்பர் நடுப்பகுதியளவில் அமெரிக்காவில் கொவிட் -19 இருந்திருக்கக்கூடியது சாத்தியம் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தினால் (சி.டி.சி) புதிதாக வெளியிடப்பபட்ட ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னர் அறியப்பட்டதை விடவும் முன்கூட்டியே உலகம் பூராவும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்தது  என்பதற்கான சான்றுகளுக்கு இது ஊக்கம் தருகிறது.

அமெரிக்காவில் கொவிட் -19 முதல் தொற்று  உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக 2019 டிசம்பரில் கொவிட் - 19 தொற்றுநோய்  அமெரிக்காவில்  பிரசன்னமாக இருந்திருக்கக்கூடும் என்று சி.டி.சி. யின் விஞ்ஞானிகள் எழுதியிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒன்பது மாநிலங்களில் வசிப்பவர்களில் 7,389 பேரின்  இரத்ததானங்களில் 106 தானங்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகே இதை அவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்  என்று ' தொற்றுநோய்கள் பற்றிய சஞ்சிகையின் ( Clinical Infectious Diseases) இணையத்தள பதிப்பில் வெளியான  ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரில் பிறையன்ற் பூங்காவில் முகக்கவசங்களை அணந்தவாறு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

முன்கூட்டியே அமெரிக்காவில்

டிசம்பர் 13 க்கும்  16க்கும் இடைப்பட்ட நாட்களில் கலிபோர்னியா, ஒரேகன் மற்றும் வொஷிங்டனில் சேகரிக்கப்பட்ட 39 கழிவுநீர் மாதிரிகளிலும் டிசம்பர் 30  க்கும் 2020 ஜனவரி 17 க்கும் இடைப்பட்ட நாட்களில் மசாசூசெட்ஸ், மிச்சிகன்விஸ்கோன்சின் அல்லது  ஐயோவா மற்றும் கொனெக்ரிகட்டில் சேகரிக்கப்பட்ட 67 மாதிரிகளில் கொரோனாவைரஸை பிரத்தியேகமாக எதிர்க்கும் பிறபொருள் எதிரிகளை ( Antibodies) சி.டி.சி.ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்று ஆய்வு கூறுகிறது.

சனத்தொகையில்  வைரஸ் பரவியிருப்பதற்கான சான்றுகைளை அறிவதற்காக சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை கிரமமாக பரிசோதனை செய்வதன் பெறுமதியையும்  ஆய்வு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நாடு பூராவும் பல்வேறு இடங்களில் தொற்றைக் கண்டறிவதற்காக இரத்ததானங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட மாதிரிகளை பயன்படுத்துவதை சி.டி.சி.தற்போதைய ஆய்வில் தொடருகிறது.

இந்த பிந்திய அறிக்கைக்கு முன்னதாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்னெவே பரவியிருப்பதாக இவ்வருடம் ஜனவரி 19ஆம் திகதி - உள்நாட்டில் பரிசோதனை ஆரம்பிப்பதற்கு  இரு நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டதாக சி.டி.சி.யின் ஆய்வு கூறுகிறது.

ஆம்.பெப்ரவரி பிற்பகுதிவரை சமூகத்தொற்று சாத்தியமாக இருக்கவில்லை என்ற போதிலும்,ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை விடவும்  முன்கூட்டியே அமெரிக்காவில் வைரஸ் பிரவேசம்  ஏற்பட்டிருந்தது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன என்று ஆய்வை எழுதியவர்கள் கூறுகிறார்கள்.

அத்துடன்,  அமெரிக்க மாநிலமான நியூ ஜேர்சியின் பெல்வில்லி நகரின் மேயரான  மைக்கேல் மெல்ஹாம் வெறுமனே காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியரின் அறிக்கை தெரிவித்திருந்த போதிலும், கொவிட்-19 க்கு  எதிரான பிறபொருள் அவரில் இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தியபோது " பொசிட்டிவாக " இருந்தது என்றும் கடந்த வருடம் நவம்பரில்  வைரஸ் தொற்றுக்கு அவர் உள்ளாகியதாக நம்பப்பட்டதாகவும் கடந்த வருடம்  ஏப்ரலில் பிற்பகுதியில் அவரே கூறினார்.

" கொரோனா வைரஸுக்கான மருத்துவ பரிசோதனையின்போது "பொசிட்டிவ் "காட்டியதை நிராகரித்து ஒரு கெட்ட காய்ச்சல் ஒன்றினால் பாதிக்கப்படட்டிருப்பதாக கூறுகிறார்கள் என்ற பயம் எனக்கு இருந்தது " என்று மேயர் தனது அறிக்கையில் கூறினார்.

நியூயோக்கில்  ஆட்களுக்கு கொவிட் பரிசோதனை 

உலகளாவிய சான்றுகள்

அமெரிக்காவில் மாத்திரமல்ல, முன்னர் நினைத்ததை விடவும் முன்கூட்டியே  சீனாவுக்கு வெளியே கொவிட் 19 சுழற்சியில் இருந்திருக்கிறது என்பதற்கு கூடுதல் சான்றுகள் அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்பெயினில் மிகவும் கீர்த்திமிக்க பல்கலைக்கழகமான  பார்செலோனா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் 2019 மார்ச் 12 சேகரி்க்கப்பட்ட  கழிவுநீர் மாதிரிகளில்  வைரஸின் மரபணுத்தொகுதி இருந்தை கண்டுபிடித்தாக  ஜூனில் பல்கலைக்கழகத்தின் அறக்கையொன்றில் கூறப்பட்டது.

உலகின் எந்தவொரு பகுதியிலும் கொவிட் -19 எவருக்காவது தொற்றியிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னதாக தொற்றின் பிரசன்னம் இருந்திருக்கிறது என்பதை இந்த முடிவுகள் வெளிப்படுத்துவதாக பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறியது.

அதேவேளை, இத்தாலியில், மிலானில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் 2019 செப்டம்பருக்கும் 2020 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுவவாசப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 959 சுகாதார தொண்டர்களில் 11.6 சதவீதமானோருக்கு  அந்த நாட்டில் கொரானாவைரஸ் முதல் தொற்று உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட  பெப்ரவரிக்கு நான்கு நாட்களுக்கு  முன்னதாக கொவிட் - 19 க்கு எதிரான பிறபொருள் எதிரிகள் விருத்தியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேவேளை, கடந்த வருடம் அக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் நான்கு பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. செப்டெம்பரில் அந்த நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது என்பது இதன் அர்த்தமாகும்.

இத்தாலியின் மிலான் நகரில் முக்கவசங்களை அணந்துகொணடு சப்வே ரயிலில் பயணஞ்செய்யம் மக்கள்.

விஞ்ஞானப் பரிசோதனை

புதிய கண்டுபிடிப்புகள்  குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரகால செயற்திட்ட  நிறைவேற்று பணிப்பாளரான கடந்த மாத இறுதியில் செய்தியாளர் மகாநாடொன்றில் பேசும்போது உலகம் பூராவுமுள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் பணியாற்றுகிறது என்று சொன்னார்.

உலக சுகாதார ஸ்தாபனம் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் காணப்பட்ட ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் மிகுந்த அக்கறையுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

உண்மையில், வைரஸின் மூலமுதலைத் தேடிக்கண்டுபிடிப்பது என்பது ஒரு கருத்தூன்றிய விஞ்ஞானச் செயற்பாடாகும். அதை விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்டு விஞ்ஞானிகளினாலும் மருத்துவ நிபுணர்களினாலும் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். கொவிட் -19  ஐப் பொறுத்தவரை, வைரஸை முதலில் அறிவித்தது என்பது சீனாவின்  வூஹான் நகரத்திலேயே வைரஸின்  மூலமுதல் இருந்தது என்று அர்த்தமாகிவிடாது. 

வரலாற்று ரீதியாக நோக்கும்போது வைரஸொன்று பற்றி முதலில் அறிவித்த இடமே அதன் மூலமுதலை பெரும்பாலும்  கொண்டிருக்கவில்லை. உதாரணத்துக்கு , எச்.ஐ.வி.தொற்று குறித்து முதலில் அறிவித்தது அமெரிக்காவே. அவ்வாறு இருந்தும் கூட அந்த வைரஸின் மூலமுதலை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதும் சாத்தியமாக இருக்கக்கூடும். அத்துடன்  மேலும் வரும்  சான்றுகள் ஸ்பானிய சளிக்காய்ச்சல்  அதன் மூலமுலை ஸ்பெயினில் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன.

உலக சகாதார ஸ்தாபனத்தின் பணப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸ் கூறியதைப் போன்று, விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்டிருக்கக்கூடிய  சகலத்தையும் அந்த ஸதாபனம் ஆராய்ந்து மூலமுதலலை கண்டறியும் செயற்பாடுகளுக்கு தீர்வைக் காணும்.

" நாம் அடிப்படையான இயற்கூறுகளை  நாம் செய்யவேண்டியதேவை இருக்கிறது. வைரஸின் மூலமுதல் பற்றிய  உண்மையை கண்டறியாமல் நாம் நிறுத்தப்போவதில்லை. அதை நாம் விஞ்ஞான அடிப்படையில், அரசியல் மயப்படுத்தாமல்,செயன்முறைகளி்ன் போது பதற்றத்தை தோற்றுவிக்க முயற்சிக்காமல் செய்வோம் என்று உலக சகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22