இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு : நாளை மறுதினம் ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பம்

Published By: Robert

31 Jul, 2016 | 04:16 PM
image

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. 

இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின்  உயர் அதிகாரிகளும்  இந்தக் கூட்டத்  தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான  குழுவில்  177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் நாளை மறுதினம் முதல்  எதிர்வரும்  26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெறவுள்ளது. அந்தவகையில் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறும்.  

மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர். 

மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான  அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22