இரண்டாம் அலையின் தீவிரத்தால் 25 ஆயிரத்தை கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை 

Published By: Digital Desk 4

08 Dec, 2020 | 10:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்களைப் போன்று நாளாந்தம் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் இதுவரையில் வயதானவர்களே கொவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். எனினும் இன்றையதினம் நியுமோனியா நிலைமை தீவிரமடைந்து உயிரிழந்த குழந்தைக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பீட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பவற்றில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான குழந்தையொன்று உயிரிழந்தமை இதுவே முதல்தடவையாகும். 

உயிரிழந்த குழந்தையொன்றுக்கு தொற்றுறுதி 

குழந்தையின் மரணம் குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிரேஸ்ட வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் வீரகேசரிக்கு தெரிவிக்கையில் , 

இக்குழந்தை நியுமோனியா நிலைமை தீவிரமடைந்தமையால் லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் மருத்துவ அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பவற்றில் குழந்தைக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. எனினும் இவர்களது பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்ற முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்குழந்தையின் மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று இல்லை எனவும் , நியுமோனியா நிலைமை தீவிரமடைந்தமையே மரணத்திற்கான காரணமாகும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை இரவு 9 மணி வரை  797 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்னர். அதற்கமைய நாட்டில்  மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 377 ஆக உயர்வடைந்துள்ளது. இம் மொத்த தொற்றாளர்களில் 25 823 பேர் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 21 258 பேர் குணமடைந்துள்ளதோடு , 7977 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 491 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

திங்களன்று பதிவான மரணங்கள்

இதே வேளை திங்கட்கிழமை 2 கொரோனா மரணங்கள் பதிவாகின.  இவற்றில் ஒரு மரணம் இனங்காணப்படாத பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருடையதாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. 

வசிக்கும் பிரதேசம் அடையாளங் காணப்படாத 62 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேற்று 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியுமோனியா நிலைமை இவரது மரணத்திற்கான காரணமாகும். 

கொழும்பு 13 , ஜம்பட்டா வீதியை சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட்-19 தொற்று மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றுடன் இரத்தம் விஷத்தன்மையடைந்தமையாகும். 

தீவிர சிகிச்சை பிரிவில் 16 தொற்றாளர்கள்

இதுவரையில் நாடளாவிய ரீதியிலுள்ள தீவிர சிகிச்சை படுக்கைகளில் 16 படுக்கைகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அத்தோடு மேலும் 130 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கம்பளை ஆதார வைத்தியசாலை வைத்தியருக்கு தொற்று 

கம்பளையிலுள்ள ஆதார வைத்தியசாலையில் வைத்தியரொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் வார்ட்டுக்கள் மூடப்பட்டுள்ளன. குறித்த வைத்தியர் வைத்தியசாலையிலும் , பிரத்தியேகமாகவும் சிகிச்சையளித்துள்ளார். இதன் காரணமாகவே 5, 6 மற்றும் 9 ஆகிய சில வார்ட்டுக்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

காலி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு 

காலி கல்வி வலயத்தில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள 26 பாடசாலைகளையும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மீள திறக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

24 மணித்தியாலங்களில் 13 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 13 மாவட்டங்களில் 703 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

அதறக்மைய நேற்று திங்கட்கிழமை கொழும்பில் 371 , கம்பஹாவில் 102, களுத்துறையில் 64, அம்பாறையில் 51, அம்பாந்தோட்டையில் 46, கண்டியில் 25, நுவரெலியாவில் 22 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எஞ்சியோர் குருணாகல், புத்தளம், காலி, அநுராதபுரம், மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04