கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் சரும பாதிப்பு

Published By: Gayathri

08 Dec, 2020 | 04:06 PM
image

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு சரும பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என அண்மைய ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக அளவில் கொரொனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 மில்லியனை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு வகையான பக்க விளைவுகள் ஏற்பட்டிருககிறது. 

குறிப்பாக நுரையீரல் செயற்பாடு, இதயச் செயற்பாடு, மூளை செயற்பாடு ஆகியவற்றில் சமச்சீரற்ற தன்மை காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களுக்கு சரும பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக கால் விரல்கள் மற்றும் பாதங்களில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். இவர்கள் தங்களது தோல் பாதிப்பிற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டியதிருக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

மேலும், பலருக்கு தோலில் வெடிப்புகள், முகத்தில் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படுவதாக கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் கொரோனா தொற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் பொழுது, அவர்கள் தங்களின் சரும ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். 

கொரோனா தொற்றுக்கு பின்னரான சரும பராமரிப்புகுறித்து உங்களின் தோல் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறவேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29