இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் உறுதி

Published By: J.G.Stephan

07 Dec, 2020 | 05:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)


இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும். நெடுங்காலமாக உள்ள முரண்பாட்டுக்கு இரு தரப்பு  பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பது அவசியம் என இந்திய பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கந்தர மீன்பிடி துறைமுக அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்ட பணிகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் மீன்பிடி கைத்தொழில் முன்னேற்றம் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எமது அரசாங்கம் ஆரம்பத்தில் மீனவர்களின் வருமான வரியை இரத்து செய்தது. இதனால்  மீனவர்கள் நன்மையடைந்தார்கள்.



2016 ஆம் ஆண்டு மீனவர்களுக்கான வருமான வரி மீண்டும் அறவிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் இந்த வரி அறவிடல் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துமீறிய வகையில் இந்திய மீனவர்  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவதால் எமது  மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பல காலமாக இரு தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அண்மையில் இடம்பெற்ற காணொளி ஊடான சந்திப்பில் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக எமது அரசாங்கத்தில்  தீர்வு பெறுவோம். மீன்பிடி கைத்தொழிலை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31