எல்.பி.எல். தொடரில் இன்று இரு போட்டிகள் ; பரிதாப நிலையில் கண்டி, காலி

Published By: Vishnu

07 Dec, 2020 | 01:22 PM
image

2020 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகும் தொடரின் 14 ஆவது போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.

கொழும்பு கிங்ஸ் அணியானது தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.

அதேநேரம் காலி அணியானது தான் எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டும் உள்ளது.

இதேவேளை இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடரின் 15 ஆவது போட்டியில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளும் மோதவுள்ளன.

யாழ்ப்பாணம் அணியானது தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.

அதேபோன்று தம்புள்ளை அணியும் தான் எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றியை பெற்று அரையிறுதி வாய்ப்பினை உறுதிபடுத்தியுள்ளது.

இந் நிலையில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளில் எது நான்காவது அணியாக அரையிறுதிக்கு நுழையும் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22