ஒட்சிசன் பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்த 6 நோயாளர்கள்

Published By: Vishnu

07 Dec, 2020 | 10:42 AM
image

பாகிஸ்தானில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றுக்கு ஒட்சிசன் விநியோகம் பற்றாக்குறை காரணமாக குறைந்தது ஆறு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

பாகிஸ்தானின் வடக்கு நகரமான பெஷாவரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் வைத்தியசாலையொன்றிலேயே இந்த ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் சனிக்கிழ‍மையன்று க்கும் மேற்பட்ட நோயாளர்கள் ஒட்சிசன் இன்றி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விநியோக நிறுவனத்தின் அலட்சியப் போக்கே வைத்தியசாலையின் ஒட்சிசன் பற்றாக்குறைக்கு காரணம் என குறித்த வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெஷாவரில் உள்ள அரசு நடத்தும் ‍குறித்த வைத்தியசாலையில் உள்ள சுமார் 200 நோயாளிகளில், கிட்டத்தட்ட 100 பேர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்பதுடன் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் ஆவார்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண சுகாதார அமைச்சர் தைமூர் சலீம் ஜாக்ரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 400,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17