போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது

Published By: Digital Desk 4

06 Dec, 2020 | 10:50 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குடி போதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றினை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், கண்டி பொலிஸ் நிலையத்தின்  எஸ்.சி.ஐ.யூ.  எனப்படும் விஷேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, கட்டுகஸ்தோட்டை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பிரதான  பொலிஸ் பரிசோதகரான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திய கார், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின், குருணாகல் - கண்டி பிரதான வீதியின்  யட்டிவாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிள்  செலுத்துனர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிரக சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்க கூறினார்.

 

இந்த விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவின்  பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56