எந்தவொரு போதைமாத்திரையும் கிடையாது: அரசாங்கம், மருத்துவத்துறையையும் முட்டாளாக்குவதாக ராஜித குற்றச்சாட்டு

Published By: J.G.Stephan

06 Dec, 2020 | 03:40 PM
image

(எம்.மனோசித்ரா)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமென கூறப்படுவதைப் போன்று போதை மாத்திரை எங்கும் இல்லை. சிலரது குறைகளை மறைப்பதற்காக மருத்துவத்துறையினரையும் முட்டாள்களாக்கும் வகையில் அரசாங்கம் பொய்களைக் கூற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், போதை மாத்திரையொன்றின் பாவனையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணமாகும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கத்தேய மருந்துகளில் எங்கும் போதை மாத்திரை இல்லை. நித்திரைக்கான சில வில்லைகள் மாத்திரமே உள்ளன. 

இதே போன்று மன அழுத்தங்களை குறைப்பதற்கான சில மருந்துகளும், பதற்றமாக உள்ளவர்களை அமைதிப்படுத்துவதற்கான மருந்துகளும் உள்ளன.  அதாவது இந்த மாத்திரைகள் எதனையும் பயன்படுத்தி யாரும் போதையாவதில்லை. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் பெரும் பொய் கூறுகிறது. 

கொலைகாரர்களை மறைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். மனநல விசேட வைத்திய நிபுணர்கள் இது தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். காரணம் இவர்கள் கூறுவதைப் போன்று ஒரு மருந்து இல்லை. போதையை இல்லாமலாக்குவதற்கான மாத்திரைகள் இருக்கின்றனவே தவிர போதைக்கான மாத்திரை என ஒன்றும் இல்லை. 

சிலரது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாக மருத்துவ துறையினர் மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மருத்துவதுறை பற்றி எதுவும் அறியாதவர்களே இவ்வாறான விடயங்களைக் கூறுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08