சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் சிறுபான்மையினத்தவர் அல்ல சீனர்களே - சபையில் சாணக்கியன் ஆவேசம்

Published By: Vishnu

06 Dec, 2020 | 09:40 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க பூச்சாண்டிக்கதைகளை உருவாக்கி சிங்கள மக்களை முட்டாள்களாக்கி வருகின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன், இந்த  நாட்டிற்கு சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் சிறுபான்மையினரால் அல்ல சீனர்களால் என்ற  உண்மைகளை சிங்கள மக்களிடம் கூறுங்கள் என்றும் சபையில் ஆவேசமாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் சுற்றுலாதுறை அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய பல வாய்ப்புகள் உள்ளன, தீவுகள், களப்பு, கடல் வளங்கள் என சகலதும் எமது வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ளன. பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஏன் கருத்தில் கொண்டு அபிவிருத்தி செய்ய முடியவில்லை. வளங்கள் இருந்தும் அவற்றை அபகரிக்கும் வேலையையே தொல்பொருளியல் திணைக்களம் செய்து வருகின்றது. மாறாக வடக்கு கிழக்கில் முதலீடுகளை செய்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அபிவிருத்திகள் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ளாது பொய்யான பூச்சாண்டிகளை உருவாக்கும் வேலையை அரசாங்கம் செய்து வருகின்றது. அரசாங்கத்தின் பலவீனத்தை மூடி மறைக்கவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

 நாட்டில் போதைப்பொருள் கடத்தல் காரர்களை எல்லாம் கைது செய்யாது வேடிக்கை பார்த்துகொண்டு வடக்கு கிழக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகப்புத்தகதில் பதிவுகளை போட்ட சிறுவர்களை கைது செய்துள்ளனர்,தேவையில்லாத விடயங்களில் அரசாங்கம் தமது வீரத்தை காட்டுகின்றது, நினைவுத் தூபிகளை உடைத்து நாசமாக்குகின்றனர், கார்த்திகை தினத்தில் கூட கோவிலில், வீடுகளில் விளக்கு போட்டமைக்காக கைதுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 

பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் எம்.பி பேசிய காரணிகளை வைத்துகொண்டு சரத் வீரசேகர போன்றவர்கள் வீரர்கள் போல் சிங்கள மக்கள் மத்தியில் முட்டாள் தனமான வாதங்களை முன்வைத்து சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதையெல்லாம் பார்கையில் முட்டாள் தனமாக உள்ளது.

சஹரானை வைத்துகொண்டு முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது, சஹரானை உருவாக அரசாங்கமே காரணம், எந்த காரணம் என்பது எனக்கு தெரியாது ஆனால் அரசாங்கமே பொறுப்புக்கூறியாக வேண்டும். 

அளுத்கம சம்பவத்தை யார் உருவாக்கியது, கருக்கலைப்பு மாத்திரை கதைகளை யார் உருவாக்கியது. இஸ்லாமியர்கள் ஏன் இன்று நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கின்றனர் என சிந்தித்துப்பாருங்கள், அவர்களின் ஜனாஸா உரிமையை கூட அவர்களுக்கு வழக்கப்படவில்லை. அப்பாவி முஸ்லிம்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு இணங்கி வாழ்கின்றனர், அவர்களுக்கான அடிப்படை உருமையை கூட அவர்களுக்கு வழங்கவில்லை. இதையெல்லாம் தெரிந்த முஸ்லிம் எம்.பிக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகக வாக்களித்துள்ளனர். இதனை  நினைத்து நான் வெட்கப்படுகின்றேன். 

முஸ்லிம்களின் உரிமைகளை கூட பெற்றுக்கொடுக்காத ஒரு ஆட்சிக்கு ஆதவளித்துள்ளீர்கள். இது வெட்கப்பட வேண்டிய காரணியாகும். தமிழர்கள் அவர்களை இறந்தவர்களுக்கு நினைவேந்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, அதற்கான நீதிமன்றத்தை நாடி நீதி கேட்கவேண்டி உள்ளது, கிறிஸ்தவர்கள் அவர்களின் உயிரிழந்தவர்களுக்கான நீதி கேட்கின்றனர். இவ்வாறான ஒடுக்குமுறை காரணமாகவே கிளர்சிகள் உருவாகின்றது. உண்மையில் இலங்கையர்களாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் தமிழர்களோ முஸ்லிம்களோ அல்ல, இந்த நாட்டிற்கு உண்மையான அச்சுறுத்தல் இன்று சீனாவினால் ஏற்பட்டுள்ளது. 

எமது வளங்களை முழுமையாக சூறையாடும் சீனர்களை கண்டு அனைவரும் அஞ்சவேண்டும். இந்த நாட்டை இன்னொரு பாகிஸ்தானாக மாற்ற வேண்டும் என்பதா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. 

இந்த  நாட்டிற்கு அச்சுறுத்தல் சிறுபான்மையினர் அல்ல சீனர்கள் உண்மைகளை சிங்கள மக்களிடம் சென்று கூறுங்கள். சீனா எம்மீதுள்ள அன்பில் இங்கு அபிவிருத்தியை செய்யவில்லை. இங்கு முன்னெடுக்கும் சீன அபிவிருத்திகளில் எத்தனை இலங்கையர்கள் வேலை செய்கின்றனர்.  அனைவரும் சீனர்கள் இங்கு வேலைக்கு வந்துள்ளனர். 

யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இனியும் இதே காரணிகளை கூறிக்கொண்டு நாடாக பின்னோக்கி செல்ல வேண்டாம். எமது குரலை ஒடுக்க வேண்டும் என்பதறாக நாட்டை ஒடுக்கிவிட வேண்டாம். உங்களுடன் கைகோர்த்து நாட்டை முன்னெடுக்க நாம் தயார், ஆனால் அதனை விடுத்தது சீனாவிற்கு அடிபணிந்துவிடம் வேண்டாம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41