மரண சான்­றி­தழ்­களோ இழப்­பீ­டு­களோ தேவை­யில்லை  : காணா­மல்­போ­னோரின் உற­வுகள் கண்ணீர் மல்க கதறல் 

Published By: MD.Lucias

12 Dec, 2015 | 10:54 AM
image

 

எமது உற­வு­களைத் தொலைத்­து­விட்டு நாம் சொல்லொணாத் துன்­பங்­க­ளுக்கு மத்­தி­யில்­வாழ்ந்து வரு­கின்றோம். எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­த­து. அவர்கள் எங்­கி­ருக்­கின்­றார்கள் என்­பதை பகி­ரங்­க­மாக அறி­வி­யுங்கள். எமக்கு மரணச் சான்­றி­தழோ இழப்­பீட்டுத் தொகையோ அவ­சி­ய­மில்­லை­யென காணாமல்போனோரின் உற­வுகள் ஜனா­திபதி ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கண்ணீர் மல்க கோரி நின்­றனர்.

யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய தினம் காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்வு இடம்­பெற்­றது.இதன்­போதே மேற்­கண்­ட­வாறு காணாமல் போனோ ரின் உற­வுகள் தமது ஆதங்­கத்தை வெளியிட்­டனர்.

எமது உற­வு­களை தொலைத்து இன்று நாம் அவர்­களை சந்­திப்­ப­தற்­காக பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்துக் கொண்டு

இடை­வி­டாது எமது தேடல்­களை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். எனினும் எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து யாரும் பகி­ரங்­க­மாக கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கு தயா­ரா­க­வில்லை என்றும் அவர்கள் கோரினர்.

இன்றும் நாம் எமது உற­வு­களைத் தொடர்ந்தும் தேடிக் கொண்டே இருக்­கின்றோம். ஆகவே எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை உறு­தி­பட தெரி­வி­யுங்கள் என கண்­ணீர்­மல்க கதறி அழுது கோரிக்கை விடுத்­த­னர்.

ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் கண்­ணீ­ருடன் கதறி அழு­த­வர்கள் அளித்த சாட்­சி­யங்கள் வரு­மாறு:

கோண்­டாவில் கிழக்­கைச்­சேர்ந்த விக்­னேஸ்­வ­ரனின் தந்­தை­யான சண்­மு­க­நாதன் மற்றும் அவ­ரது அண்­ண­ரான ஜெக­தீஸ்­வரன் ஆகியோர் ஒரே குடும்­பத்தில் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தனர். இவர்கள் சாதா­ர­ண­மான வாழ்வில் வலம் வந்து கொண்­டி­ருந்­த­போது 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி சண்­மு­க­நாதன் விக்­னேஸ்­வ­ர­னுக்கு விசேட பதவி உயர்­வுகள் கிடைத்­தி­ருந்­தன. அது­மட்­டு­மின்றி உள்­நாட்­டிலும் வெ ளிநாட்­டிலும் பல்­வேறு செயற்­பா­டு­களை அவர் முன்­னெ­டுத்து வந்தார்.

இவ்­வா­றான நிலையில் அவரை நசுக்­க­வேண்­டிய தேவை யாருக்கும் இருந்­த­தில்லை. எனினும் அவர் திடீ­ரென காணாமல் போகச் செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ரு­டைய காணாமல் போதல் சம்­ப­வத்­திற்கு தொடர்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யா­கின்­றது.

அரி­யா­லையைச் சேர்ந்த மகா­லிங்கம் சசி­கலா என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

எனது சகோ­த­ர­ரான ரவி­கரன் 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொழில் நிமிர்த்தம் சென்­ற­போது திடீ­ரெனக் காணா­மல்­போ­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து நாம் தேடு­தல்­களை மேற்­கொண்டோம். அதன்­போது எனது சகோ­தரர் காணாமல் போன­தாக கூறப்­பட்­டது. எனினும் அவர் வழ­மை­யாக தனது பயணப் பாதையில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது இரா­ணுவ வாகனம் ஒன்று அவ­ரை­தொ­டர்ந்து சென்­றுள்­ளது. அதனைத் தொடர்ந்து இரா­ணுவ முகாம்­க­ளுக்கு நாங்கள் சென்று எனது சகோ­தரர் தொடர்­பாக தக­வல்­களை வழங்­குங்கள் எனக்­கோ­ரினோம்.

அதன்­போது அவ்­வா­றான எந்த ஒரு நப­ரை­யும்­கைது செய்­ய­வில்லை என்றே இரா­ணு­வத்­தினர் கூறி வந்­தனர். அதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்­குழு பொலிஸ் நிலையம் உள்­ளிட்ட பல­த­ரப்­பட்ட இடங்­களில் முறைப்­பா­டு­களை பதிவு செய்தோம்.தற்­போது வரை எமது உற­வு­க­ளை­நோக்கி தோடல் தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றது என்­றார்.

நட­ராஜா சிவக்­கொ­ழுந்து என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

எனது மகன் தொழி­நுட்பக் கல்­லூ­ரியில் கல்வி பயின்­று­கொண்­டி­ருந்­த­போது மீசா­லைக்குச் சென்­றி­ருந்தார். இதன்­போது வேம்­பி­ராயில் உள்ள தனது அண்­ணா­வின்­வீட்­டிற்குச் சென்­றவர் அங்கு தேனீர் அருந்­திக்­கொண்­டி­ருக்­கும்­போது இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். கஜ­பாகு படைப்­பி­ரிவைச் சேர்ந்த லெப்­ரிணட் ஜீ.பி.ஜீ குல­தி­லக என்­ப­வரே நேர­டி­யாக என­து­ம­கனை கைது செய்­துள்ளார்.

எனது மற்­றொரு மகனின் மனை­வி­யான கண்­மணி இதனை நேரில் கண்­ட­சாட்­சி­ய­மாக உள்ளார் எனக் குறிப்­பிட்டார்.

நாவலர் வீதி ஆனைப்ந்­தியைச் சேர்ந்த தர்­ம­லிங்கம் நடேஸ் என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

எனது மக­னான டினேஸ் பாபு என்­ப­வரை தற்­போதும் தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றேன். 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த குறித்த நபர் யாழ். பேருந்து நிலை­யத்தில் காணா­மல்­போ­ன­தாக எனக்கு அறி­யக்­கி­டைத்­தது என்­றார்.

மணி­யந்­தோட்ட உத­ய­பு­ரத்­தைச்­சேர்ந்த கருப்பன் நாகம்மா என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் 1996ஆம் ஆண்டு தனது இரு மகன்­க­ளான பால­கி­ருஸ்ணன் மற்றும் சுரேஸ் ஆகியோர் முறையே ஜூன் ஜூலை மாதங்­களில் அடுத்­த­டுத்துக் காணா­மல்­போ­ன­தாக ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார். விசே­ட­மாக ஜூலை­மாதம் தன­து­ம­க­னான பால­கி­ருஸ்ணன் தேவா­ல­யத்­திற்குச் சென்­ற­வேளை துண்டிப் பகு­தி­யில்­வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவர் கைது செய்­யப்­பட்­டதை அவ­ரு­டைய சிறிய தந்­தையார் நேரில் கண்­டுள்ளார். அதே­போன்று சுரேஸ் கடற்­றொ­ழி­லுக்குச் சென்று திரும்­பும்­போது ஜூலை மாதம் கொழும்­புத்­துறைச் சந்­தியில் அமைந்­துள்ள சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். அதன் பின்னர் அவர்­களை எங்கு தேடியும் கிடைக்­க­வில்லை என்­றார்.

உடு­விலைச் சேர்ந்த கந்­தையா யோக­ராசா என்­பவர் சாட்­சி­ய­­ம­ளிக்­கையில்

எ­ன­து மக­னான சத்­திய ரூபன் 2002 ஆம் ஆண்டு முதல் காணா­மல்­போனார். எனது மகன் வேலை நிமித்தம் யாழ் நக­ருக்குச் சென்­றி­ருந்த போது காணா­மல்­போ­யுள்­ளார். யாழ்­நகர் சத்­தி­ர­சந்திப் பகு­தியில் அவரை இரா­ணுவம் பிடித்து வாக­னத்தில் ஏற்­றி­ய­தாக நேரில் கண்ட உற­வி­னர்கள் என்­னிடம் கூறி­னர்.

அதனையடுத்து யாழ்.மாவட்டத்தின் முக்கிய இராணுவ முகாம்களான ஆரியகுளம்-, சிங்கள மகாவித்தியாலம் ஆகியவற்றுக்குச் சென்று முறையிட்டிருந்தோம். எனினும் அங்கு எனது மகனைக் கண்டறிவதற்கான வாய்ப்புக்கள் கிட்டியிருக்கவில்லை. இன்றுவரை எனதுமகனைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என்றார்.

இவ்வாறு நேற்றைய தினம் சாட்சியமளித்தவர்களில் பலர் குறிப்பிட்டிருந்தனர். இதன்போது சாட்சியங்களின் பல்வேறு வழிகளில் குறுக்குவிசாணை செய்திருந்த அதிகாரிகள் ஈற்றில் ஜனாதிபதி ஆணைக்குழவின் விசாணைப்பிரிவினர் உங்களது இல்லத்திற்கு வருகை தந்து மேலதிக விசாணைகளை மேற்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31