வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பான விசேட சந்திப்பு

Published By: J.G.Stephan

05 Dec, 2020 | 02:03 PM
image

(செ.தேன்மொழி)
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் புதிய சுகாதார விதிமுறைகளை தயாரிப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறையைச்  சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட  ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் தீர்மானத்திற்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமச்சர் பவித்திரா வன்னியாராச்சி, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரனத்துங்க மற்றும் ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய்தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானிகள் உட்பட சுகாதார அதிகாரிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்கள், சுற்றுலாத்துறை  அபிவிருத்து சபை உறுப்பினர்கள், ஹோட்டல் துறையின் பிரதானிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலத்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, சுகாதார பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு மத்தியில் விமான நிலையத்தை திறந்து சுற்றுலாத்துறையை மீண்டும் நடத்திச் செல்வதற்காக,  புதிய சுகாதார விதிமுறைகளை தயாரிப்பதற்காக  முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட  ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் தீர்மானத்திற்கமைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ் .ஹெட்டியாராச்சி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ ஆகியோரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50