மஹர சிறைச்சாலை களேபரம்: உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இரு கைதிகள்

Published By: J.G.Stephan

05 Dec, 2020 | 01:28 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்மானம் தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான வழக்கு நேற்று வத்தளை நீதிவான் புத்திக சி.ராகல முன்னிலையில் வந்தபோது, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 எவ்வாறாயினும் சிறை களேபரத்தில் உயிரிழந்த கைதிகளில் இருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், மன்றில் ஆஜரான ராகம பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்தார்.

 அதன்படி  உயிரிழந்த 11 பேரில் சம்பத் குமார சுபசிங்க, அலங்கார தேவகே அஜித் ஆகிய இரு கைதிகள் உள்ளடங்குவதாக அவர் மன்றுக்கு அறிவித்தார். உயிரிழந்த சிறைக் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

மஹர சிறைக் களேபரத்தின் போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை கொரோனா குறித்த வர்த்தமானி பிரகாரம் தகனம் செய்வதன் ஊடாக, அது குற்றவியல் விசாரணைகளை பாதிக்கலாம் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு, வத்தளை நீதிவான் நீதிமன்றுக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஒழிப்பு விதிமுறைகளுக்கமைய உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் சட்ட சிக்கல் காணப்படுவதாக தெரிவித்து ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள், வத்தளை நீதவான் புத்திக சி. ராகலவுக்கு தெரிவித்தனர்.

எனினும் கைதிகளின் சடலங்களை எரித்தால் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன், குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு, சட்டத்தரணி சேனக பெரேரா விடயங்களை முன்வைத்தார்.

சுகாதார விதிமுறைகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை எரிப்பதற்கான கட்டளைச்சட்டம் சாதாரண நிலைமையின் போது அமுல்படுத்தப்பட்டாலும் கொலை குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இந்த கட்டளை சட்டத்தை அமுல்படுத்த முடியுமா என சட்டத்தரணி சேனக பெரேரா நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையிலேயே உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் நேற்றைய தினம் முடிவெடுக்கப்படாத நிலையில் வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.  அன்றைய தினத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் புத்திக சி. ராகல, ராகம  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55