இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் ! மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வு

Published By: Digital Desk 3

05 Dec, 2020 | 10:17 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 26 000 ஐ கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 130 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறான கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வாரம் சில பாடசாலைகளும் மூடப்பட்டன.  இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளையும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு பூட்டு

கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளுக்கும் அக்குரணையில் 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கண்டி நகருக்கருகிலுள்ள போகம்பறை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் இருந்து நகருக்கு பெருமளவிலானோர் வருகை தருவதை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டது. சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இதே வேளை நேற்றைய தினமும் 517 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,559 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களில் 19,438 பேர் குணமடைந்துள்ளதோடு , 6,991 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை பதிவான மரணம்

பிலியந்தலையைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

சுற்றுலா விடுதிகள் திறக்கப்பட்டன

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக பராமரிக்கப்படும் சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்கள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்காக இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படும் என அறிக்கையொன்றினூடாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், கடந்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் ஏற்கனவே முற்பதிவு செய்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் விடுதிகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46