இலங்கை மீதான நம்பிக்கையின்மையே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சினை - ஸ்ரீதரன்

Published By: Gayathri

04 Dec, 2020 | 05:51 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளது. 

எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

வடக்கிலோ - கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஆனால், யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில்  இராணுவ முகாமே உள்ளது. 

உதாரணமாக, பரந்தன் கைத்தொழில் பேட்டையை கூறினால் மிக முக்கியமான வளமாகும்.  பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள இடத்தில் கைத்தொழில் பேட்டையாக்க வேண்டும். 

அதற்கான வெளிநாட்டு முதலீடுகளுக்கு எமது மக்கள் தயாராக உள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை முடக்கப்பட்டுள்ளது. இதற்கும் வெளிநாடுகளில் உள்ள எமது தமிழர்கள் தயாராக உள்ளனர். 

எனினும், அதனை தடுக்கும் சக்திகளே அதிகமாகும். வாழைச்சேனை காகித தொழிற்சாலையும் இதே நிலையில் உள்ளது. இப்போது சாதாரண நிலையில் இயங்கிய போதும் இந்த தொழிற்சாலையில் பாரிய அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆணையிரவில் உள்ள உப்பளம்  உலகளவில் பிரசித்தி பெற்றது. எனினும் அந்த பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்படாது உள்ளதனால் அந்த பகுதியில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. 

எனினும், இதனை கருத்திற்கொண்டு வேலையற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கிகொடுக்க இவற்றை மீண்டும் இயக்க முடியும். அரச கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளையேனும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க முடியும்.

இவ்வாறு வடக்கு கிழக்கில் பல பண்ணைகள், தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தொழில் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக முடக்கப்பட்டு வருகின்றது. 

இதனை அரசாங்கம் கருத்திற்கொண்டு அரசியல் ரீதியாக இதனை பார்க்காது ஜனநாயக அடிப்படையில் செயற்படுத்த வேண்டும். வடக்கிலோ கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். 

அதனால் குறைந்தது இருபதற்கும் குறையாத தொழில் முயற்சி உருவாக்கப்படும். எமது மக்களின் விருப்பம் இது. அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். 

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளது. 

எனவே அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04